பாறைக்குழி நீரில் மூழ்கி 14 வயது சிறுவன் பலி

Dead News- திருப்பூர் அருகே பாறைக்குழியில் மூழ்கி, சிறுவன் உயிரிழந்தான்.;

Update: 2022-08-05 02:50 GMT

சூர்யா

Dead News- திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி நகராட்சிக்குட்பட்ட ராக்கியாபாளையம் அம்மன் நகர் முதல் வீதியை சேர்ந்தவர் ரமேஷ். பனியன் தொழிலாளி. இவருடைய மனைவி சரண்யா. இவர்களது மகன் சூர்யா (வயது 14). கடந்த ஆண்டு ராக்கியாபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு முடித்துவிட்டு, இந்த ஆண்டு பள்ளிக்கு செல்லாமல் சூர்யா வீட்டில் இருந்துள்ளான்.

இந்நிலையில், நேற்று முன்தினம் சூர்யா, பள்ளியில் படித்த தனது நண்பர்களுடன் ராக்கியாபாளையம் பகுதியில் உள்ள பாறைக்குழிக்கு குளிக்க சென்றான். அங்கு குளித்துக் கொண்டிருந்தபோது, சூர்யாவுக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினான். அதை பார்த்து, பயந்துபோன அவனது நண்பர்கள், அங்கிருந்து ஓடிவிட்டனர். ஆள் நடமாட்டமற்ற அப்பகுதியில், காப்பாற்ற  யாருமற்ற நிலையில், சிறுவன் சூர்யா தண்ணீரில் மூழ்கி, உயிரிழந்தான்.

தகவலறிந்து அங்குவந்த திருமுருகன்பூண்டி போலீசார் மற்றும் அவிநாசி தீயணைப்பு நிலைய வீரர்கள், சூர்யாவின் உடலை மீட்டனர்.

இதுகுறித்து திருமுருகன் பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். ஆடிப்பெருக்கு தினத்தன்று, சிறுவன் உயிரிழந்த சம்பவம், ராக்கியாபாளையம் பகுதியில் பெரும்சோகத்தை ஏற்படுத்தியது.  


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News