அவினாசியில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி
அவினாசியில், தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
சமூகநலத்துறை மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், திருப்பூர் மாவட்டம், அவினாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கடந்த, 2019ல் இருந்து, தற்போது வரை இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்தவர்களுக்கு, நல உதவி வழங்கப்பட்டது.
அதன்படி, பட்டப்படிப்பு முடித்து, 82 பெண்களுக்கு தலா, 1 பவுன், 50 ஆயிரம் ரூபாய்; 10ம் வகுப்பு முடித்த, 38 பேருக்கு, தலா ஒரு பவுன் மற்றும், 25 ஆயிரம் ரூபாய் என, 1.10 கோடி ரூபாய் மதிப்பிலான நல உதவி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரி, ஒன்றியக்குழு தலைவர் ஜெகதீசன், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சேதுமாதவன், உமாவதி, லோகநாதன், தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் சாமிநாதன், பொதுக்குழு உறுப்பினர் சரவணன்நம்பி, ஒன்றிய செயலாளர் பழனிசாமி, நகர செயலாளர் பொன்னுசாமி உட்பட பலரும் பங்கேற்றனர்.