அவினாசியில் வேளாண் காடு உருவாக்க 20 ஆயிரம் தேக்கு நாற்று ஒதுக்கீடு
வேளாண் காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ், அவினாசி வட்டத்தில், 20 ஆயிரம் தேக்கு நாற்றுகள் வழங்கப்பட உள்ளன.;
நிரந்தர பசுமையை உருவாக்கும் நோக்கி வழங்கப்பட உள்ள தேக்கு நாற்றுகள்.
சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், விவசாய நிலங்களில் நிரந்தர பசுமையை உருவாக்கவும், 11.14 கோடி ரூபாயில், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை மூலம், வேளாண் காடு வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அதன்படி, திருப்பூர் மாவட்டம், அவினாசி வட்டாரத்தில், 20 ஆயிரம் தேக்கு நாற்றுகள், 500 வேம்பு நாற்றுகள் இலக்கீடாக ஒதுக்கப்பட்டு, விரைவில் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளன. நடப்படும் மரக்கன்றுகளை வளர்த்து ஊக்குவிப்பு வழங்கும் வகையில், நடப்பாண்டு நடவு செய்யப்படும் அனைத்து மரக்கன்றுகளுக்கும், மரம் ஒன்றுக்கு, ஏழு ரூபாய் வீதம், வளர்ப்பு மானியம், அடுத்தாண்டு முதல் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.