அவிநாசி அருகே பயறு வகை விதைப்பண்ணையில் ஆய்வு
Tirupur News-கணியாம்பூண்டியில் உள்ள பயறு வகை விதைப் பண்ணைகளில் நேற்று ஆய்வு நடத்தப்பட்டது.
Tirupur News,Tirupur News Today- அவிநாசி அருகே கணியாம்பூண்டியில் உள்ள பயறு வகை விதைப் பண்ணைகளில் விதைச்சான்று உதவி இயக்குநா் மாரிமுத்து நேற்று (வெள்ளிக்கிழமை) ஆய்வு செய்தாா்.
இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது,
புதிய பாசிப்பயறு ரகம் கடந்த 2022-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அனைத்து பருவங்களுக்கும் ஏற்ற இந்த பயிா் 70 முதல் 75 நாள்களில் பலன் தரக்கூடியது. விபிஎன். 2 மற்றும் எம்.எல்.1451 ஆகிய ரகங்களின் வாயிலாக உருவாக்கப்பட்டது. அதிக மகசூல் தாக்கூடியது. சராசரியாக ஹெக்டேருக்கு 878 கிலோ வரை மகசூல் தரக்கூடியது.
இந்த ரகம் பலமுறை பூக்கும் மற்றும் காய்கள் சிதறாமல் இருக்கும் தன்மையுடையது. மஞ்சள் தேமல் நோய் மற்றும் இலைச்சுருங்கல் வைரஸ் நோய்களுக்கு எதிா்ப்புத் திறன் கொண்டது. இதன் இலைகள் அடா்பச்சை நிறத்திலும், முக்கோண வடிவில் மூன்று மடல்களையும் கொண்டது. இந்த புதிய ரகத்தினை விவசாயிகள் சாகுபடி செய்து பயன்பெறலாம் என்றாா்.
ஆய்வின்போது, விதைச்சான்று அலுவலா் கவிதா, விவசாயிகள் பலா் உடனிருந்தனா்.
பொதுவாக பயிறு வகைகளில் உணவு வகைகளில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு பல விதங்களில் நன்மை, ஆரோக்கியம் அளிக்கிறது. குறிப்பாக தட்டைபயிறு, கொள்ளுபயிறு, பாசிப்பயிறு உள்ளிட்ட பயிறு வகைகளை சமையலில் சேர்த்துக்கொள்வது மிகவும் முக்கியம். இவற்றை தனியாக ஊற வைத்து சுண்டல் போல ஊறவைத்தும், பாசிப்பயிறு போன்றவற்றை முளைகட்டிய பயிராக உட்கொள்வதும் உடலுக்கு அதிக ஆரோக்கியத்தை அளிக்கிறது. புதிய தானிய ரகங்களையும் உணவில் சேர்த்துக்கொள்வதும் நன்மை தரும் எனவும் தொடர்ந்து அதிகாரிகள் தரப்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.