மாணவி தற்கொலை விவகாரம்: மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அவினாசி அரசு கலைக்கல்லுாரி வளாகத்தில், இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2021-11-15 16:45 GMT

அவினாசி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை சின்மயா பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில், உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இந்திய மாணவர் சங்கத்தினர், அவினாசி அரசு கலை அறிவியல் கல்லுாரி வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தனியார் பள்ளி கல்லுாரிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கும் பாலியல் விழிப்புணர்வு கல்வி அளிக்க வேண்டும்.

கல்வி நிறுவனங்களில் பாலியல் குற்றம் நடைபெறுவதை தவிர்க்க, மாவட்ட அளவில் மனித உரிமை செயல்பாட்டாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், காவல்துறை அதிகாரிகள், பெற்றோர் ஆசிரியர் சங்க பிரதிநிதிகள், மாணவர் சங்க பிரதிநிதிகளை உள்ளடக்கி கண்காணிப்புக்குழு அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி, கோஷம் எழுப்பினர். இதில், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட துணை செயலாளர்கள் பாலமுரளி, மணிகண்டன், மாவட்டக்குழு உறுப்பினர் சஞ்சய் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News