சிறுதானிய சாகுபடி விவசாயிகளுக்கு ஊக்குவிப்பு
ஊட்டச்சத்து மிக்க சிறுதானிய சாகுபடி குறித்து, விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.;
ஆலத்தூர் கிராமத்தில் சிறுதானிய சாகுபடி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அவினாசி வட்டாரம், ஆலத்துார் கிராமத்தில் விவசாயிகளுக்கு இந்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தப்பட்டது. தேசிய உணவு பாதுகாப்பு திட்ட மாவட்ட ஆலோசகர் அரசப்பன் பேசுகையில்,''சோளம், கம்பு, தினை, ராகி ஆகியவற்றை விவசாயிகள் அதிகளவில் பயிரிட வேண்டும். கோ– 30 ரக சோள விதைகள் மூலம் கூடுதல் பலன் பெற முடியும்,'' என்றார்.
அவினாசி வேளாண்மை துறை உதவி இயக்குனர் அருள்வடிவு, வேளாண்மை அலுவலர்கள் சத்யா, சங்கீதா, சுகன்யா, தேசிய உணவு பாதுகாப்பு திட்ட தொழில்நுட்ப உதவியார் கிருத்திகா, வேளாண் விற்பனை துறை உதவி வேளாண்மை அலுவலர் சங்கர் கணேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்று, அவரவர் துறை சார்ந்த மேற்கொள்ளப்பட்டும் அரசு திட்டங்கள் குறித்து விளக்கினர். சிறுதானிய சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், பிரசார வாகனமும் இயக்கி வைக்கப்பட்டது.