ஆடுகள் வளர்ச்சி குறைவு: காரணம் என்ன?

ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யாவிட்டால், அவற்றின் வளர்ச்சி பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-01-17 12:45 GMT

பைல் படம்.

திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி, உடுமலை, பல்லடம், தாராபுரம் உள்ளிட்ட பல இடங்களில், பால் உற்பத்திக்காகவும், இறைச்சி தேவைக்காகவும் கால்நடை வளர்ப்பில் பலரும் ஈடுபடுகின்றனர். பல்வேறு காரணங்களால் ஆடுகளுக்கு, குடற்புழுக்கள் ஏற்பட்டு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. பலவீனம், தீவனம் எடுக்காதது, வளர்ச்சி குறைவு உட்பட பிரச்னைகள் ஏற்படும். எனவே, குறிப்பிட்ட இடைவெளியில் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும் என கால்நடை துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News