அன்னூர் பகுதியில் கடும் உரத் தட்டுப்பாடு: விவசாயிகள் அவதி
அன்னூர் பகுதியில் கடும் உரத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் உரம் கிடைக்காமல் விவசாயிகள் அலை மோதுகின்றனர்.
அன்னூர் வட்டாரத்தில், வாழை, கரும்பு, மஞ்சள், சோளம், நிலக்கடலை மற்றும் பயறு வகைகள் 20 ஆயிரம் ஏக்கரில் கிணற்றுப் பாசனம் மற்றும் மானாவாரியாக பயிரிடப்படுகிறது. வாழை, மஞ்சள், கரும்பு ஆகிய பயிர்களுக்கும், தென்னைக்கும், கலப்புரமும், டி.ஏ.பி., உரமும் பயன்படுத்தி வருகின்றனர், சில வாரங்களாக உரங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் உரம் கிடைக்காமல் விவசாயிகள் அலை மோதுகின்றனர். ஈரோடு மாவட்டம், சென்று வாங்கி வருகின்றனர். அதுவும் உரம் வாங்கும்போது நுண்ணூட்டச்சத்து கண்டிப்பாக சேர்ந்து வாங்க வேண்டும் என்று உர விற்பனையாளர்கள் நிபந்தனை விதிப்பதால் தேவை இல்லாமல் நுண்ணூட்ட சத்து சேர்ந்து வாங்க வேண்டி உள்ளது. இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.