அவிநாசி அரசு கலைக் கல்லூரியில் கருத்தரங்கு

Tirupur News- அவிநாசியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் கடல் சார் வாணிகம் குறித்த கருத்தரங்கு நடந்தது.

Update: 2024-02-16 14:11 GMT

Tirupur News- அவிநாசியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் கடல் சார் வாணிகம் பற்றிய கருத்தரங்கு நடந்தது.

Tirupur News,Tirupur News Today- அவிநாசி,அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், வணிகவியல் சர்வதேச வணிகம் துறை நடத்திய கடல் சார் வாணிகம் பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது.

இவ்விழாவில் கல்லூரி முதல்வர் ஜோ. நளதம்  சிறப்புரை ஆற்றினார். இவ்விழாவில் கோவை கடல்சார் கல்லூரி, மேலாண்மை துறையின் இயக்குனர் முனைவர். செந்தில்குமார்  சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களிடம் உரையாற்றினார்.

கடல் சார் வணிகம் பற்றியும் கப்பல் வணிக வரலாறு பற்றியும் விளக்கி கூறினார்.மேலும் கப்பலில் உள்ள துறைகளைப் பற்றியும் அந்த துறைகளின் பணிகளைப் பற்றியும் விளக்கினார். ஏற்றுமதி செய்வதற்கான வழிமுறைகளையும் இறக்குமதி செய்வதற்கு தேவையான ஆவணங்களைப் பற்றியும் அதை பெறுவதற்கான வழிமுறைகள் பற்றியும் அந்த ஆவணங்களின் தேவைகள் பற்றியும் விளக்கினார்.

கடல்சார் வணிகத்தின் உள்ள வேலை வாய்ப்புகளை பற்றியும் அந்த வேலை வாய்ப்புகள் பெறுவதற்கான வழிமுறைகளை பற்றியும் மாணவர்களுக்கு விளக்கிக் கூறினார். எதிர்காலத்தில் கடல்சார் வாணிபத்தின் தேவைகளையும் அதன் வளர்ச்சிகளைப் பற்றியும் எடுத்துரைத்தார்.இவ்விழாவினை சுமார் 200 மாணவர்கள் பங்கேற்று பயன் பெற்றனர்.

வணிகவியல் (சர்வதேச வணிகம்) துறை தலைவர் செ.பாலமுருகன் நன்றியுரை வழங்கினார். விழாவில் பங்கேற்ற மாணவர்களுக்கு தேனீர் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News