அவினாசி: புதுப்பாளையம் ஊராட்சியில் பெண்களுக்கு சுய தொழில் பயிற்சி
அவினாசி அருகே, புதுப்பாளையம் ஊராட்சியில், செயற்கை நகை தயாரிப்பு பயிற்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் வழங்கப்பட்டது.;
திருப்பூர் மாவட்டம், கனரா வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் சார்பில், அவினாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, புதுப்பாளையம் ஊராட்சி நிர்வாகத்தின் ஏற்பாட்டில், பெண்களுக்கு செயற்கை நகை தயாரிக்கும் பயிற்சி வழங்கப்பட்டது. இப்பயிற்சியை, சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனர் பூபதி ராஜா துவக்கி வைத்தார்.
பயிற்சியாளர் ருக்மணி, செயற்கை நகை தயாரிப்பது, அதன் நுணுக்கங்களை கற்றுக் கொடுத்தார். பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. புதுப்பாளையம் ஊராட்சி தலைவர் கஸ்தூரி பிரியா, துணைத்தலைவர் சங்கீதா ஆகியோர் சான்றிதழ் வழங்கினர். பயிற்சி பெற்றவர்களுக்கு சுயதொழில் செய்வதற்கான வாய்ப்பு குறித்தும் விளக்கப்பட்டது.