அவினாசி அரசு கல்லுாரியில், அறிவியல் கண்காட்சி

அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு, அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது.

Update: 2022-02-28 13:30 GMT

அவிநாசி அரசு கலை தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு, நடைபெற்ற கண்காட்சி.

அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு, அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது. இயற்பியல் மற்றும் வேதியியல் துறை மாணவர்கள், தங்களின் அறிவியல் சார்ந்த படைப்புகளை வைத்திருந்தனர். பிற துறை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பார்வையிட்டனர். விழாவிற்கு, கல்லூரி முதல்வர் நளதம் தலைமை வகித்தார். 66 மாணவர்கள், இக்கண்காட்சியில் பங்கெடுத்தனர்.

சிறந்த படைப்புகளை தேர்வு செய்யும் பொறுப்பை, ஆங்கிலத்துறை தலைவர் தாரணி, உடற்கல்வி இயக்குனர் பிரசன்னா ஆகியோர் ஏற்றனர். இக்கண்காட்சிக்கான ஏற்பாடுகளை, கல்லுாரி இயற்பியல் துறை தலைவர் அ.பாலமுருகன், வேதியியல் துறை தலைவர் முனைவர் ஷகிலா பானு, பேராசிரியர்கள் செந்தில்குமார், கீர்த்தனா ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.

Tags:    

Similar News