அவினாசியில் பள்ளி மேலாண்மை குழு ஆலாேசனை கூட்டம்
அவினாசியில் உள்ள பள்ளிகளில் மேலாண்மை குழு ஆலாேசனை கூட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம், அவினாசியில் உள்ள, 116 அரசு ஊராட்சி ஒன்றிய துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், பள்ளி மேலாண்மைக்குழு அமைப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.
அந்தந்த பள்ளி, தலைமையாசிரியர்கள் தலைமையில் நடந்த கூட்டத்தில், ஏராளமான பெற்றோர் ஆர்வமுடன் பங்கேற்றனர். பலரும், பள்ளி மேலாண்மை குழுவில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்தனர். குழுவின் நோக்கம், செயல்பாடு குறித்தும் விளக்கப்பட்டது. இதில், அரசு பள்ளிகளின் மேம்பாட்டுக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.