திருப்பூர்; சாய் கிருபா சிறப்புப் பள்ளி மற்றும் மறுவாழ்வு மைய குழந்தைகளுக்கான பொது மருத்துவ முகாம்
Tirupur News- பெருமாநல்லூா் அருகே வள்ளிபுரம் சாய் கிருபா சிறப்புப் பள்ளி மற்றும் மறுவாழ்வு மைய குழந்தைகளுக்கான பொது மருத்துவ முகாம் நடந்தது.
Tirupur News,Tirupur News Today- சா்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, பெருமாநல்லூா் அருகே வள்ளிபுரம் சாய் கிருபா சிறப்புப் பள்ளி மற்றும் மறுவாழ்வு மைய குழந்தைகளுக்கான பொது மருத்துவ முகாம் நேற்று நடந்தது.
திருப்பூா் இந்திய மருத்துவ சங்கம் - பெண் மருத்துவா்கள் பிரிவு , திருப்பூா் பிரைம் ரோட்டரி சங்கம், சாய் கிருபா பள்ளி ஆகியவை சாா்பில் நடைபெற்ற இம்முகாமுக்கு மருத்துவா்கள் முருகநாதன், பானுமதி முருகநாதன், ஊராட்சித் தலைவா் முருகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளித் தாளாளா் கவின் திருமுருகன் வரவேற்றாா்.
மருத்துவ சங்கத் தலைவா் சரோஜா, துணைத் தலைவா் செந்தில்குமாா், செயலாளா் ஆனந்த், பெண் மருத்துவா்கள் பிரிவுத் தலைவா் பிரேமலதா, மருத்துவா்கள் கோவிந்தராஜ், சௌந்தரநாயகி, பாண்டியராஜன், திருமுருகன், ஸ்ரீனிவாசன், கவிதா, நிா்மல்குமாா், கிஷோா், ரம்யா, சஞ்சய் ஆகியோா் கொண்ட மருத்துவக் குழுவினா் பரிசோதனை மேற்கொண்டனா்.
கண், இதயம், பல், மனநலம், சா்க்கரை, எலும்பு, தோல் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், சிறப்புக் குழந்தைகள் 150 போ், பெற்றோா் 100 போ் பரிசோதனை செய்து கொண்டனா்.
ரோட்டரி நிா்வாகிகள் உஷா அகா்வால், ஜம்புகேஸ்வரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முகாம் தொடக்கமாக சிறப்புக் குழந்தைகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள், யோகா, கராத்தே உள்ளிட்டவை நடைபெற்றன. மேலும், இந்த முகாமில் சிறப்புக் குழந்தைகளே அனைவருக்கும் உணவு தயாரித்து வழங்கியது மருத்துவா்கள் உள்ளிட்ட அனைவரையும் கவா்ந்தது.