அவினாசியில் சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம்

அவினாசியில், சாலையோர ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டனர்.

Update: 2021-12-06 13:45 GMT

அவினாசியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

திருப்பூர் மாவட்டம், அவினாசி நகரின் பிரதான சாலையாக, அவினாசி–சேவூர் சாலை உள்ளது. சத்தி, புளியம்பட்டி, நம்பியூர், அந்தியூர் என, பல இடங்களுக்கு இந்த சாலை வழியாக மக்கள் பயணிக்கின்றனர். இதனால், நாளுக்கு நாள் வாகன நெரிசல் அதிகரித்து வருகிறது. அவ்வப்போது, விபத்தும் நேரிடுகிறது.

சாலையோர கடைகளால் வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதை தவிர்க்க, சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற, நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். கடைக்காரர்களுக்கு, 15 நாள் கால அவகாசம் வழங்கி நோட்டீஸ் வழங்கப்பட்டது. பெரும்பாலான கடைக்காரர்கள், தங்கள் ஆக்கிரமிப்புகளை தாங்களே அகற்றி கொண்டனர். இன்று, காலை, நெடுஞ்சாலை எல்லையில் இருந்த கடைகளின் பெயர் பலகை உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

Tags:    

Similar News