சாலையோர கடைகள் அமைக்க அனுமதிக்க கூடாது; அவிநாசியில் வியாபாரிகள் கோரிக்கை

Tirupur News-அவிநாசியில் சாலையோரக் கடைகள் அமைக்க அனுமதி வழங்க கூடாது என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2023-10-28 16:21 GMT

Tirupur News- திருப்பூர், அவிநாசியில் அதிகரித்து வரும் ரோட்டோர கடைகள் (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- அவிநாசியில் சாலையோர வியாபாரிகள் இடமாற்ற விவகாரத்தில், நடவடிக்கை எடுக்காவிட்டால் அனைத்து வியாபாரிகளுக்கும் சாலையோரக் கடைகள் அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அவிநாசியில் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்காத வகையில் அவா்களின் கடைகளை முறைப்படுத்த வேண்டும். அவிநாசி பேரூராட்சியில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின்படி சாலையோரக் கடைகளை ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் மட்டும் வாரச் சந்தை வளாகத்துக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவிநாசி அனைத்து வியாபாரிகள் சங்கத்தினா் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதற்கிடையே, இரு தரப்பினரிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், சாலையோரக் கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும். இல்லையெனில் சாலையோரக் கடைகளை அமைக்க அனைத்து வியாபாரிகளுக்கும் அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரி அவிநாசி பேரூராட்சி நிா்வாகம், வட்டாட்சியா் உள்ளிட்டோரிடம் அவிநாசி அனைத்து வியாபாரிகள் சங்கத்தினா் மனு அளித்தனா்.

மனுவை பெற்றுக் கொண்ட தாசில்தார் மோகனன், அவிநாசி பேரூராட்சி நிா்வாகத்தினா் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

திருப்பூர் மாவட்டத்தில், சாலையோர கடைகள் என்பது வசதியற்ற வியாபாரிகளின் வாழ்வாதாரமாக உள்ளது. அவிநாசி மட்டுமின்றி திருப்பூர் மாநகர பகுதிக்குள் பல்வேறு இடங்களில் இதுபோன்ற ரோட்டோர கடைகள் மிக அதிகமாக காணப்படுகின்றன. குறிப்பாக பழைய பஸ் ஸ்டாண்ட் வளாகம், பஸ் ஸ்டாண்ட் முன்பகுதி, பல்லடம் ரோடு,  வீரபாண்டி பிரிவு வரை பல இடங்களில் ரோட்டோர கடைகளை காண முடிகிறது. அதே போல், குமரன் ரோடு, பார்க் ரோடு, ரயில்வே ஸ்டேஷன் முன்பகுதி, திருப்பூர்  மாநகராட்சி அலுவலகம், முனிசிபல் வீதி என பல இடங்களில் அதிகளவில் ரோட்டோர கடைகள் காணப்படுகின்றன.

இது அனுமதி மறுக்கப்பட்ட நிலையிலும், இது தொடர்கிறது. வியாபாரிகளின் நலன் கருதி கருணை அடிப்படையில் இதை அனுமதித்தாலும், இதனால் வாகன போக்குவரத்து ஏற்பட்டு, பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அதனால், திருப்பூரிலும் இதுபோன்று மாற்று இடங்களில் இந்த ரோட்டோர கடைக்காரர்களுக்கு ஒதுக்கி தர, மாநகராட்சி அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

Tags:    

Similar News