புதுப்பாளையம் ஊராட்சியில் மழை பாதித்த சாலைகள் சீரமைப்பு
அவினாசி தாலுகா, புதுப்பாளையம் ஊராட்சியில், மழை நீர் தேங்கி பாதிக்கப்பட்ட சாலைகள் சீரமைக்கப்பட்டன.
அவினாசி தாலுகா, புதுப்பாளையம் ஊராட்சியில், டெங்கு கொசு ஒழிப்புப்பணி, மாஸ் கிளீனிங் பணி உள்ளிட்டவை முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு, பொதுமக்களின் தேவைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
அவ்வகையில், வஞ்சிபாளையம் காந்தி நகர் பகுதியில் மழைநீர் தேங்கி இருந்த சாலைகள் சரி செய்யப்பட்டுள்ளது. அண்மையில் பெய்த மழையால், காந்தி நகர் பகுதி சாலையில் மழை நீர் தேங்கி, மக்கள் அவதிக்குள்ளாகினர். இது குறித்த தகவல் அறிந்ததும், ஊராட்சித் தலைவர் கே.பி. கஸ்தூரி பிரியா, வார்டு கவுன்சிலர் உள்ளிட்டோர், சாலை சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினர்.
அதன்பேரில், காந்தி நகர் பகுதியில் குண்டும் குழியுமாக மழை நீர் தேங்கியிருந்த பகுதிகள், பொக்லைன் இயந்திரம் மூலம் சமன்படுத்தப்பட்டு, ரோடு சீரமைக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி சாலை தற்போது மழை நீர் தேங்காதவாறு, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. புதுப்பாளையம் ஊராட்சி நிர்வாகத்திற்கு, பொதுமக்கள் நன்றி தெரிவித்து கொண்டுள்ளனர்.