அவினாசி அரசு கல்லுாரியில் குடியரசு தின விழா கொண்டாட்டம்
அவினாசி அரசு கல்லுாரியில் குடியரசு தினம், மிக எளிமையாக கொண்டாடப்பட்டது.;
திருப்பூர் மாவட்டம், அவினாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், குடியரசு தினம் மிக எளிமையாக கொண்டாடப்பட்டது. கல்லுாரியின் தமிழ்த்துறை தலைவர் டாக்டர் மணிவண்ணன், கொடியேற்றினார்.
உடற்கல்வி இயக்குனர் பிரசன்னகுமார், அலுவலக ஊழியர் ராமலிங்கம், இரவு காவலர் செந்தில்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.