வேட்பாளருடன் ஒருவருக்கு மட்டுமே அனுமதி : விதிமுறைகள் அறிவிப்பு

திருப்பூர் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது

Update: 2022-02-06 13:00 GMT

அவினாசி பேரூராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அனைத்துக் கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம்

திருப்பூர் மாவட்டம், அவினாசி பேரூராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அனைத்துக் கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில், காவல் துணை கண்காணிப்பாளர் பவுல்ராஜ் கூறியதாவது;

தேர்தல் பிரசாரத்திற்கு அனுமதி வேண்டுவோர், சம்மந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் அனுமதி பெற்ற பின், காவல் துறையில் விண்ணப்பம் செய்ய வேண்டும். கொரோனா நடத்தை விதிமுறை அமலில் இருப்பதால், பொதுக்கூட்டம் நடத்த தற்காலிகமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பொது இடம் மற்றும் சுவர்களில் கட்சி சம்மந்தப்பட்ட விளம்பரம், பேனர்களை அகற்ற வேண்டும்.

பொது சுவர்களில், சுவர் விளம்பரம் மற்றும் பிரசாரம் செய்யக்கூடாது. தனியார் இடத்தில் சுவர் விளம்பரம் செய்யும் போது சம்மந்தப்பட்ட நபர்களிடம் அனுமதி பெற வேண்டும். அதற்கான ஒப்புதல் கடிதத்தை சம்மந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளிடம் கொடுத்த பின்பே விளம்பரம் செய்ய வேண்டும்.

தங்கள் கட்சி சார்பில் பொது இடத்தில் வைக்கப்பட்டுள்ள கொடி கம்பம், விளம்பர பலகைகளை அகற்ற வேண்டும். கட்சியின் தேர்தல் பணிக்குழு அலுவலகங்களை ஓட்டுச்சாவடியிலிருந்து, 200 மீட்டர் துாரத்தில் அமைக்க வேண்டும். இரவு 9.00 மணிக்கு, பிரசாரத்தை முடித்துக் கொள்ள வேண்டும். வீடு வீடாக பிரசாரம் செய்யும் வேடபாளர்கள், தங்களுடன் ஒருவரை மட்டுமே அழைத்து செல்ல வேண்டும் என்று கூறினார்

Tags:    

Similar News