அவினாசி பகுதிகளில் மழையில் நிரம்பும் நீர்நிலைகள்: விவசாயிகள் மகிழ்ச்சி

அவினாசியில் பரவலாக பெய்யும் மழையில், நீர்நிலைகள் நிரம்ப துவங்குகின்றன.

Update: 2021-10-27 00:00 GMT

அவினாசியில் பெய்த மழையில் குளம், குட்டைகள் நிரம்பத் துவங்கின.

அவினாசியில் பரவலாக பெய்யும் மழையில், நீர்நிலைகள் நிரம்ப துவங்குகின்றன.

திருப்பூர் மாவட்டம், அவினாசி சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த இரண்டு நாட்களாக, பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், ஆங்காங்கே உள்ள குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பத்துவங்குகின்றன. சேவூர் அருகேயுள்ள கிளாக்குளத்துக்கு தண்ணீர் வரத்துவங்கியுள்ளது.

நடுவச்சேரி ஊராட்சியில், கருக்கன்காட்டுப்புதுார், தளிஞ்சிப்பாளையம், வடுகனுார் உள்ளிட்ட இடங்களில் உள்ள குட்டைகள் நிரம்பி வருகின்றன. இன்னும், சில தினங்கள் மழைநீடிக்கும் பட்சத்தில், அனைத்து குளம், குட்டைகளும் நிரம்பும்; நிலத்தடி நீர்மட்டம் உயரும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

Similar News