அவினாசி பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் 1,200 வாழைகள் சேதம்
அவினாசி பகுதியில், பலத்த காற்றுக்கு, 1,200 வாழை மரங்கள் சாய்ந்தன.;
திருப்பூர் மாவட்டம், அவினாசியில், கடந்த சில நாட்களாக அவ்வப்போது, பலத்த காற்றுடன், மழை பெய்து வருகிறது. இதனால், வாழை உள்ளிட்ட பயிர்கள் காற்றுக்கு சாய்கின்றன. சேதமடைந்த வாழை மரங்கள் குறித்த கணக்கெடுப்பு பணியில், அவிநாசி தோட்டக்கலை துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரை நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், கடந்த, 14ம் தேதி வீசிய காற்றில், பொங்கலுார் பகுதியில், 500 வாழை மரங்கள் சாய்ந்துள்ளன. 15ம் தேதி, நடுவச்சேரி பகுதியில், 250 மரங்கள் சாய்ந்தன. நேற்று முன்தினம் இரவு பெய்த மழையில், கருவலுார் அருகேயுள்ள ராமநாதபுரம் பகுதியில், 400 வாழை மரங்கள் சாய்ந்துள்ளது என, கணக்கெடுக்கப்பட்டுள்ளது.