அவிநாசி பகுதியில் ரூ.7.81 கோடியில் திட்டப்பணிகள்; கலெக்டர் ஆய்வு
Tirupur News,Tirupur News Today- அவிநாசி பகுதியில் ரூ.7.81 கோடியில் நடக்கும் திட்டப்பணிகளை கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார்.அவிநாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தார்.
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாநகராட்சி மற்றும் அவிநாசி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ.7 கோடியே 81 லட்சம் மதிப்பிலான திட்டப்பணிகளை கலெக்டர் கிறிஸ்துராஜ் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பூர் மாநகராட்சி ஆண்டிப்பாளையம் குளத்தில் அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.46 லட்சம் மதிப்பில் நடைபாதை மற்றும் கம்பிவேலி அமைக்கும் பணி நடக்கிறது. இந்த பணிகளை கலெக்டர் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவிநாசி ஊராட்சி ஒன்றியம் கஸ்தூரி பாய் வீதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கூடுதல் கட்டிட பணி, தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் கட்டப்பட்டு வரும் ரேஷன் கடை, செம்பியநல்லூர் ஊராட்சியில் சின்னமலைக்கவுண்டன்புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கட்டப்படும் கூடுதல் வகுப்பறைகள், புதுப்பாளையம் ஊராட்சி கவுண்டம்பாளையத்தில் தேசிய ஊரக நகர்ப்புற திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சத்தில் அமைக்கப்பட்டு வரும் எண்ணெய் நிறுவனம், ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் கால்நடை தீவன தயாரிப்பு நிறுவனத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.
அவிநாசி சந்தைப்பேட்டையில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.28 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் 5 வீடுகள், நடுவச்சேரி ஊராட்சியில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் கட்டப்படும் வீடுகள், முதலிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் சமையலறை கட்டுமான பணி, பஞ்சலிங்கம்பாளையம் அரசு பள்ளியில் சமையலறை கட்டிடம், பால் கொள்முதல் நிலையம் ஆகியவற்றையும் கலெக்டர் ஆய்வு செய்து பணி விவரங்களை கேட்டறிந்தார்.
அவிநாசி அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகள் பிரிவு, ஆய்வகம், மருந்துகள் இருப்பு மற்றும் ரூ.5 கோடியே 15 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் மகப்பேறு கூடுதல் மருத்துவமனை கட்டிடத்தையும் கலெக்டர் ஆய்வு செய்தார். நோயாளிகளிடம் சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தார். திட்டப்பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
அவிநாசி தாசில்தார் அலுவலகம் முன்னதாக அவிநாசி தாசில்தார் அலுவலகம் மற்றும் அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகளையும், நாதம்பாளையம் ரேஷன் கடை மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தையும் கலெக்டர் ஆய்வு செய்தார். ஆய்வின்போது அவிநாசி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயகுமார், மனோகரன், அவிநாசி தாசில்தார் சுந்தரம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.