போத்தம்பாளையம், தத்தனூா் ஊராட்சிகளில் ரூ.1.71 கோடியில் திட்டப் பணிகள்; கலெக்டர் ஆய்வு
Tirupur News- அவிநாசியை அடுத்துள்ள போத்தம்பாளையம், தத்தனூா் ஆகிய ஊராட்சிகளில் நடந்து வரும் ரூ.1.71 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
Tirupur News,Tirupur News Today- அவிநாசியை அடுத்துள்ள போத்தம்பாளையம், தத்தனூா் ஆகிய ஊராட்சிகளில் நடந்து வரும் ரூ.1.71 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் நேற்று ஆய்வு மேற்கொண்டாா்.
இதில் போத்தம்பாளையம் ஊராட்சியில் ரூ.35.29 லட்சம் மதிப்பில் பெருமாள் கோயில் முதல் பொன்னம்பாளையம் பேருந்து நிறுத்தம் வரையிலும் அமைக்கப்படும் சாலைப் பணி, ரூ.29.40 லட்சம் மதிப்பில் அமைக்கப்படும் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடம் ஆகியவற்றை ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.
இதையடுத்து, தத்தனூா் ஊராட்சியில் ரூ.38.03 லட்சம் மதிப்பில் கோட்டப்பள்ளி முதல் அண்ணமாா் கோயில் வழியாக சத்தி சாலை வரை அமைக்கப்படும் சாலைப் பணி, ரூ.5.67 லட்சம் மதிப்பில் பொங்கேகவுண்டன்புதூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி சுற்றுச்சுவா் அமைக்கும் பணி, ரூ.4.15 லட்சம் மதிப்பில் பள்ளிக் கட்டடம் புதுப்பிக்கும் பணி, ரூ.49.96 லட்சம் மதிப்பில் சத்தி சாலை ஆவாரண்காடு பிரிவு முதல் பாப்பநாயக்கன்பாளையம், வெள்ளமடை, ஆதிதிராவிடா் காலனி வரை அமைக்கப்படும் சாலைப் பணி, ரூ.2.40 லட்சம் மதிப்பில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் வீடு, ரூ.6.49 லட்சம் மதிப்பில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வகுப்பறைக் கட்டடங்கள் புனரமைக்கும் பணி என மொத்தம் ரூ.1.71 கோடி மதிப்பில் நடந்து வரும் பல்வேறு திட்டப் பணிகளை கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு மேற்கொண்டாா்.
முன்னதாக போத்தம்பாளையம் ஊராட்சி, தண்ணீா்பந்தம்பாளையம் ஆதிதிராவிடா் குடியிருப்புப் பகுதியை ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் லட்சுமணன், அவிநாசி வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சிகள்) விஜயகுமாா், அவிநாசி வட்டாட்சியா் மோகனன், உதவிப் பொறியாளா்கள் செந்தில், மனோஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.