தெக்கலுாரில் விசைத்தறியாளர்கள் ஆர்ப்பாட்டம்
அவினாசி அருகே தெக்கலுாரில் விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வை அமல்படுத்த கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறிகளுக்கு அறிவித்த கூலி உயர்வை அமுல்படுத்த கோரியும், 2 லட்சம் விசைத்தறியாளர்களின் குடும்ப வாழ்வாதாரம் காக்க கோரியும், கடந்த 8 ஆண்டுகளாக கூலி உயர்வு வழங்க மறுக்கும் ஜவுளி உற்பத்தியாளர்களை கண்டித்து பல நாட்களாக விசைத்தறி உரிமையாளர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கு ஆதரவாக விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினரும் வேலை நிறுத்த கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் அவிநாசி தெக்கலூரில், 500க்கும் மேற்பட்ட விசைத்தறி உரிமையாளர்கள் குடும்பத்துடன் பங்கேற்று, தமிழக முதல்வர் அவர்கள் விசைத்தறி உரிமையாளர்களின் குடும்பங்களை காக்கக் கோரி முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் விசைத்தறி உரிமையாளர் சங்கத்தின் நிர்வாகி முத்துசாமி, பொன்னுச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.