குன்னத்தூரில் நாளை (சனிக்கிழமை) மின்தடை
Tirupur News- மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக, நாளை குன்னத்தூரில் மின்தடை செய்யப்படுகிறது.
Tirupur News,Tirupur News Today- பெருமாநல்லூரை அடுத்துள்ள குன்னத்தூரில் நாளை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.
குன்னத்தூர்
மின்தடை பகுதிகள்; காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
குன்னத்தூர் பகுதியில் நாளை (சனிக்கிழமை)மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது. எனவே குன்னத்தூர், 16 வேலம்பாளையம், குறிச்சி பகுதிகளுக்குட்பட்ட குன்னத்தூர், ஆதியூர், தாளப்பதி, காவுத்தாம்பாளையம், வெள்ளிரவெளி, செம்மாண்டம்பாளையம், சின்னியம்பாளையம், கணபதிபாளையம், 16 வேலம்பாளையம், கருமஞ்செரை, நவக்காடு, செட்டிகுட்டை, குறிச்சி,தண்ணீர் பந்தல்பாளையம், கம்மாளகுட்டை, ஆயிகவுண்டம்பாளையம், சொக்கனூர் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்படும்.
இத்தகவலை மின்வாரிய பொறியாளர் தெரிவித்துள்ளார்.