பெருமாநல்லூரில் நாளை மின்தடை

Tirupur News,Tirupur News Today- மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக, நாளை பெருமாநல்லூர் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் நாளை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.

Update: 2023-08-17 13:22 GMT

Tirupur News,Tirupur News Today- நாளை மின்தடை அறிவிப்பு (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- பெருமாநல்லூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில், நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அவிநாசி மின் வாரிய செயற்பொறியாளர் பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

செங்கப்பள்ளி துணை மின் நிலையப் பகுதியில் நாளை (வெள்ளிக்கிழமை) 18ம் தேதி, மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால், கீழ்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

மின்தடை பகுதிகள்; காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை

பூலுவபட்டி மற்றும் பெருமாநல்லூர் தெற்கு பகுதி அலுவலகங்களுக்கு உட்பட்ட குருவாயூரப்பன் நகர், படையப்பா நகர், வாவிபாளையம், கூலிபாளையம், நெட்டகட்டிபாளையம், காளிபாளையம், கிளன்மார்க்கன்மில் பகுதி, ஆதியூர் பிரிவு, தான்டாகவுண்டன் புதூர் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News