கருவலூரில் நாளை மின்தடை
Tirupur News- அவிநாசியை அடுத்துள்ள கருவலூர் சுற்றுவட்டார பகுதிகளில், நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டம், கருவலூரில் நாளை மின்தடை செய்யப்படுவதாக, மின்வாரியம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அவிநாசி மின்வாரிய செயற்பொறியாளர் பரஞ்சோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
கருவலூர் துணை மின் நிலையத்தில் நாளை 15-ம் தேதி(வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை கருவலூர் துணை மின்நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில், மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.
மின்தடை பகுதிகள்; காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை
கருவலூர், அரசப்பம்பாளையம், நைனாம்பாளையம், ஆரியக்கவுண்டம்பாளையம், அனந்தகிரி, எலச்சிப்பாளையம், மருதூர், காளிபாளையம், நம்பியாம்பாளையம், உப்பிலிபாளையம், மனப்பாளையம், காரைக்கால்பாளையம், முறியாண்டம்பாளையம், குரும்பபாளையம், பெரியகாட்டுப்பாளையம், செல்லப்பம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.