பல்லடம் பகுதிகளில் இன்று ( 23ம் தேதி) மின்தடை

Tirupur News,Tirupur News Today- மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக, இன்று ( புதன்கிழமை) பல்லடம் பகுதிகளில் இன்று மின்விநியோகம் இருக்காது என, அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-08-23 00:43 GMT

Tirupur News,Tirupur News Today- இன்றைய மின்தடை அறிவிப்பு (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- பல்லடத்தை அடுத்துள்ள தெற்கு அவிநாசிபாளையம், செங்கப்பள்ளி துணை மின் நிலையங்களில் உயரழுத்த பாதையில் பராமரிப்புப் பணிகள் நடக்க இருப்பதால் கீழ்கண்ட பகுதிகளில் இன்று 23-ம் தேதி( புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

செங்கப்பள்ளி துணை மின்நிலையம்

மின்தடை பகுதிகள்;காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை

செங்கப்பள்ளி, ஜோதி நகா், சரவண நகா், ப்யூா் டிராப் கம்பெனி பகுதி, கேபிஆா் மில் பகுதி, கருடா நகா் ஆகிய பகுதிகளில், மின்விநியோகம் இருக்காது.

பல்லடம் அருகேயுள்ள தெற்கு அவிநாசிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க இருப்பதால், கீழ்கண்ட பகுதிகளில், இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என்று, பல்லடம் மின்சார வாரிய செயற்பொறியாளா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

தெற்கு அவிநாசிபாளையம் துணை மின்நிலையம்

மின்தடை பகுதிகள்;காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை

கொடுவாய், வெள்ளியம்பாளையம், வினோபா நகா், கொசவம்பாளையம், கருணைபாளையம் பிரிவு, செங்கோடம்பாளையம், அய்யம்பாளையம், பள்ளிபாளையம், கோவில்பாளையம், தொட்டிபாளையம், பொல்லிக்காளிபாளையம், தெற்கு அவிநாசிபாளையம், வடக்கு அவிநாசிபாளையம் ஒரு பகுதி, அலகுமலை ஒரு பகுதி, காட்டூா் ஒரு பகுதி, மற்றும் உகாயனூா் ஆகிய பகுதிகளில், மின்சாரம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News