கானூர் புதூரில் வரும் 11ம் தேதி மின்தடை
Tirupur News,Tirupur News Today- கானூர் புதூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால், வரும் 11-ம் தேதி மின்தடை செய்யப்படுகிறது.
Tirupur News,Tirupur News Today- கானூர் புதூர் துணை மின் நிலையம் மற்றும் பசூர் துணை மின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது. அதனால், வருகிற 11-ம் தேதி (திங்கட்கிழமை) இந்த துணை மின்நிலையத்தில் மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து, அவிநாசி மின்வாரிய செயற்பொறியாளர் பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
கானூர் புதூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால், வருகிற 11-ம் தேதி (திங்கட்கிழமை) இந்த துணை மின்நிலையத்தில் மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது. அதன்படி திங்கள் அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில், மின்சாரம் இருக்காது.
கானூர் புதூர் துணை மின் நிலையம்
மின்தடை பகுதிகள்; காலை 9 மணி முதல் மாலை 4 மணி
கானூர், அல்லப்பாளையம், கஞ்சப்பள்ளி, ராமநாதபுரம், செட்டிபுதூர் / ஆலத்தூர், தொட்டிபாளையம், மொண்டிபாளையம், குமாரபாளையம், தாசராபாளையம், ஆம்போதி, பசூர் ஒரு பகுதி, பெத்தநாயக்கன்பாளையம் ஒரு பகுதி ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.
பசூர் துணை மின் நிலையம்
மின்தடை பகுதிகள்; காலை 9 மணி முதல் மாலை 4 மணி
பசூர், பூசாரிப்பாளையம், இடையர்பாளையம், செல்லனூர், ஆயிமாபுதூர், ஒட்டர் பாளையம், ஜீவா நகர், அன்னூர் மேட்டுப்பாளையம், மேட்டுக்காடு புதூர், அம்மாசெட்டிபுதூர், புதுப்பாளையம்| பூலூவபாளையம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.