அவிநாசியில் நாளை (21ம் தேதி) மின்தடை
Tirupur News- மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக, அவிநாசியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
Tirupur News,Tirupur News Today- அவிநாசியில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவிநாசி மின்வாரிய செயற்பொறியாளர் பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
அவிநாசி அருகே உள்ள நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால் நாளை (21-ம் தேதி) இந்த துணை மின் நிலையத்தில் மின்சார விநியோகம் தடை செய்யப்படுகிறது. அதன்படி நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த துணை மின் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.
நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா துணை மின் நிலையம்
மின்தடை பகுதிகள்; காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை
பச்சாம் பாளையம், பரமசிவம்பாளையம், பெரியாயிபாளையம், பள்ளிபாளையம்,பொங்குபாளையம், காளம்பாளையம், பழைய ஊஞ்சப்பாளையம், புதுஊஞ்சப்பாளையம், குப்பாண்டம்பாளையம், துலுக்கமுத்தூர், நல்லாத்துப்பாளையம், வ.அய்யம்பாளையம்,
ஆயிக்கவுண்டம்பாளையம், வேலூர், மகாராஜா கல்லூரி, எஸ்.எஸ்.நகர், வீதிக்காடு, முட்டியங்கிணறு, திருமலை நகர், பெ.அய்யம்பாளையம் ஒரு பகுதி, கணக்கம்பாளையம், சிட்கோ ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.