மார்க்சிஸ்ட்டுக்கு நகராட்சி தலைவர் பதவி: பூண்டி திமுகவினர் 'ஷாக்'

திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி நகராட்சி தலைவர் பதவி, மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், தி.மு.க.வினர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Update: 2022-03-03 13:00 GMT

திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி நகராட்சியில், 27 வார்டுகள் உள்ளன. நடந்து முடிந்த தேர்தலில், தி.மு.க., கூட்டணி, 17 இடங்களில் வெற்றி பெற்றது. தி.மு.க., 9 வார்டு, இ.கம்யூ., 5 வார்டு, மா.கம்யூ., 3 வார்டுகளில் வெற்றி பெற்றது.

நகரமன்ற தலைவர் பதவி, தி.மு.க.,வுக்கு தான் கிடைக்கும் என, தி.மு.க.,வினர் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த சூழலில், இப்பதவி கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கி, தி.மு.க., தலைமை அறிவிப்பு வெளியிட்டது. இதனால், நகராட்சி தலைவர் பதவி கனவில் இருந்த  தி.மு.க.,வினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

Tags:    

Similar News