காவல்துறையினர் கொண்டாடிய புத்தாண்டு
புத்தாண்டையொட்டி, காவல் துறையினர் நள்ளிரவில் கேக் வெட்டி, கொண்டாடினர்.
திருப்பூர் மாவட்டம், அவினாசி புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், அவிநாசி போலீசார், புத்தாண்டை வரவேற்கும் விதமாக, நள்ளிரவு, 12:00 மணிக்கு 'கேக்' வெட்டி, புத்தாண்டை வரவேற்றனர். காவல் துறை துணை கண்காணிப்பாளர் பவுல்ராஜ், கேக் வெட்டி, பிற அதிகாரிகள், காவலர்கள் மற்றும் அங்கிருந்த ஆட்டோ ஓட்டுனர்கள் சாலையில் பயணித்த பஸ், லாரி உள்ளிட்ட வாகன ஓட்டுனர்களுக்கு வழங்கினர். பின், விபத்தில்லாமல் வாகனம் ஓட்ட வேண்டும் என்பது தொடர்பான சாலை விதிகளையும் அறிவிப்பாக வெளியிட்டனர்.