கிராம ஊராட்சிகளில் 'அடர்வனம்' பசுமையை உருவாக்க திட்டம்

கிராம ஊராட்சிப் பகுதிகளில் உள்ள குளம், குட்டை, நீர்நிலை உள்ள இடங்களில் மரக்கன்று நடும் திட்டம் ஊக்குவிக்கப்படுகிறது.;

Update: 2021-10-29 16:00 GMT

அவினாசியில் உள்ள கிராம ஊராட்சிகளில் அடர்வனம் உருவாக்கும் நோக்கில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

தமிழகம் முழுவதும், பருவமழை பெய்து வருகிறது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பெய்யும் மழைநீரை சேமித்து வைக்கவும், வாய்ப்புள்ள இடங்களில் மரக்கன்றுகளை நட்டு, பசுமை சூழலை ஏற்படுத்தவும், திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, கிராம ஊராட்சிகளுக்கு சொந்தமான இடங்களில் மரக்கன்று நடும் பணி நடந்து வருகிறது.குறிப்பாக, பல்லடம், அவினாசி, உடுமலைபேட்டை, தாராபுரம் உள்ளிட்ட இடங்களில் இப்பணியில் ஊராட்சி நிர்வாகங்கள் வேகம் காட்டி வருகின்றன. நுாறு நாள் வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், மரக்கன்று நடும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

Tags:    

Similar News