துலுக்கமுத்துார் குளம் நிரம்பியதால் மக்கள் குதுாகலம்!

அவினாசி அருகே, துலுக்கமுத்துார் குளம் நிரம்பியதால், கிராமப்புற மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Update: 2021-11-07 05:15 GMT

துலுக்கமுத்துார் பகுதியில் நிரம்பிய குளத்தில் இருந்து, தடையின்றி  தண்ணீர் வெளியேறும் வகையில் பணி மேற்கொள்ளப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், அவினாசி, சேவூர் எல்லையில் உள்ள ஈரோடு மாவட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், அவினாசி அருகேயுள்ள துலுக்கமுத்துார் குளம் நிரம்ப துவங்கியுள்ளது.

இக்குளத்தில் நிரம்பும் நீர் வெளியேறும் பாதையில் மரம், செடி, கொடிகள் அடர்ந்து வளர்ந்திருப்பதால், வெள்ளநீர் அடைப்பட்டு, குளத்தை ஒட்டியுள்ள புது ஊஞ்சப்பாளையம், பழைய ஊஞ்சப்பாளையம் குடியிருப்புகளுக்குள் புகுந்து, சேதம் ஏற்படுத்தி விடும் என, அங்குள்ள மக்கள் அச்சம் தெரிவித்தனர்.

இதையடுத்து, அவினாசி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மூலம், குளத்தில் தேங்கும் உபரிநீர் தடையின்றி வெளியேறும் வகையில், தடையாக இருந்த முட்புதர், செடி, கொடிகள் அகற்றப்பட்டன.

Tags:    

Similar News