அவினாசி: தோட்டத்தில் 9 மயில்கள் பலியானது எப்படி? வனத்துறை விசாரணை
அவினாசி அருகே, தோட்டத்தில் 9 மயில்கள் பலியான விவகாரம் குறித்து, வனத்துறையினர் தீவிரமாக விசாரிக்கின்றனர்.;
அவினாசி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட குப்பாண்டம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஊஞ்சப்பாளையம் கிராமம் உள்ளது. இங்குள்ள விவசாய தோட்டத்தில், 9 மயில்கள் இறந்து கிடப்பதாக, வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர், இறந்த மயில்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மயில்கள் விஷம் வைத்து கொல்லபட்டனவா அல்லது, வேறு காரணம் உள்ளதா என வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.