அவிநாசிலிங்கேஸ்வரா் கோவில் உண்டியல்கள் திறப்பு

Tirupur News- அவிநாசிலிங்கேஸ்வரா் கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டது. பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம், நகைகள் கருவூலத்தில் சேர்க்கப்பட்டது.

Update: 2024-04-30 08:13 GMT

Tirupur News- அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- திருப்பூரை அடுத்துள்ள அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டதில் 53 கிராம் தங்கம், 225 கிராம் வெள்ளியுடன் ரூ.27 லட்சத்து 68 ஆயிரம் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனா்.

கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்ற கருணாம்பிகையம்மன் உடனமா் அவிநாசிலிங்கேஸ்வரா் கோவில், கடந்த ஜனவரி மாதம் கோவில் புனரமைப்பு செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கடந்த வாரத்தில், சித்திரை திருவிழா தேரோட்டமும் வெகு விமரிசையாக நடந்தது குறிப்பிடத்தக்கது. பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரோட்ட விழாவில் பங்கேற்றனர். தமிழகத்தில் உள்ள கோவில்களில் அவிநாசி பெரிய கோவில் தேர் மிகப்பெரியது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், கோவிலில் உள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணும் பணி நேற்று (திங்கள்கிழமை) நடைபெற்றது.

அவிநாசிலிங்கேஸ்வரா், கருணாம்பிகையம்மன், சுப்பிரமணியா், விநாயகா், காசிக் கிணறு, கோ சாலை, திருப்பணி உண்டியல், பெருமாள் கோயில், ஆஞ்சனேயா் கோயில் உள்ளிட்ட உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில், பக்தா்கள் ரூ.27 லட்சத்து 68ஆயிரம் 589 ரொக்கம், 53.860 கிராம் தங்கம், 225.74 கிராம் வெள்ளி உள்ளிட்டவை காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

Tags:    

Similar News