புதிய வாக்காளாராக இணைய, 3,087 பேர் விண்ணப்பம்
அவினாசி சட்டமன்ற தொகுதியில், நான்கு நாள் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமில், 3,087 பேர் புதிதாக இணைய, விண்ணப்பம் வழங்கியுள்ளனர்.;
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள, சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அவினாசி சட்டசபை தொகுதியில், கடந்த, 13,14 மற்றும், 20, 21 ஆகிய நான்கு நாட்கள் நடந்த சிறப்பு முகாமில், மொத்தம், 5,123 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில், புதியதாக வாக்காளர் பட்டியலில் இணைய, 3,087 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, நாளையும், 27 ம் தேதி, 28ம் தேதியும், தொகுதியில் உள்ள, 313 ஓட்டுச்சாவடிகளிலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த வாய்ப்பை புதிய வாக்காளர்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காத வாக்காளர்கள் பயன்படுத்தி, வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை இணைத்துக் கொள்ள விண்ணப்பம் வழங்கலாம் என, அலுவலர்கள் தெரிவித்தனர்.