பல்லடம் அருகே 2 குழந்தைகளுடன் தாய் மாயம்
பல்லடம் அருகே 2 குழந்தைகளுடன் மாயமான தாயை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பல்லடம் அருகே 2 குழந்தைகளுடன் மாயமான பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது 36). இவரது மனைவி கவிதா ( 29 ). இவர்களது மகன்கள் ரத்தீஷ்( 8 ), மிஜின்( 6 ) இந்த நிலையில் கடந்த 29- ந்தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள வேலம்பட்டியில் வசிக்கும் கவிதாவின் அக்கா தேவி வீட்டிற்கு கவிதா தனது 2 மகன்களுடன் சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் காலை தேவி மற்றும் அவரது கணவர் ஆகியோர் வேலைக்கு சென்று விட்டனர். வேலை முடிந்து இரவு 8 மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்தபோது கவிதா மற்றும் அவரது 2 மகன்களுடன் வீட்டில் இல்லை. பல இடங்களில் தேடியுள்ளனர். எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. செல்போனில் தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இது குறித்து அவர்கள் பெருமாளுக்கு தகவல் கொடுத்தனர்.
உடனடியாக வேலம்பட்டி வந்த பெருமாள் இது குறித்து அவினாசி பாளையம் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் எங்கு சென்றனர்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
தாய் மற்றும் ௨ குழந்தைகள் மாயமாகி இருப்பதால் அவர்களை யாரும் கடத்தி சென்றார்களா? அல்லது கள்ளக்காதல் விவகாரமா? என்ற பல கேள்விகளை எழுப்பி உள்ளது. அவினாசி பாளையம் போலீசார் இதுகுறித்து ஒரு வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.