அவினாசியில் டெங்கு பரவலை தடுக்க மருந்து தெளிப்பு
அவினாசியில் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளதால் டெங்கு பரவலை தடுக்க கொசு மருந்து தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவினாசியில், கொசு உற்பத்தி அதிகரித்துள்ளதால், டெங்கு காய்ச்சல் பரவும் வாய்ப்புள்ளது. தேக்கி வைக்கப்படும் நல்ல தண்ணீரில் தான், டெங்கு காய்ச்சல் பரப்பும் கொசு உற்பத்தியாகி நோய் பரப்பும் என்ற சூழலில், டெங்கு பரவுவதை தவிர்க்க, பேரூராட்சி நிர்வாகம் சார்பில், வார்டுகள் தோறும் கொசு மருந்து தெளிக்கப்பட்டது.
இருப்பினும், பொதுமக்கள், டெங்கு கொசு உற்பத்தியாவதை தடுக்க, தண்ணீரை தேக்கி வைக்க கூடாது என்பது போன்ற விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது.