நடுவச்சேரி ஊராட்சியில் கொசு ஒழிப்பு பணி
நடுவச்சேரி ஊராட்சியில், டெங்கு ஒழிப்பு நடவடிக்கையாக கொசு மருந்து தெளிக்கப்பட்டது.;
அவினாசி நகரம் மற்றும் கிராமப்புறங்களில், டெங்கு காய்ச்சல் பரவல் தென்பட துவங்கியுள்ளது. ஒவ்வொரு கிராம ஊராட்சி நிர்வாகத்தினரும், கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி, அவினாசி அருகேயுள்ள நடுவச்சேரி ஊராட்சியில் உள்ள வீதிகளில், கொசு மருந்து தெளிக்கப்பட்டது. ஊராட்சி தலைவர் வரதராஜன், செயலாளர் மணிகண்டன் ஆகியோர் மேற்பார்வையில், இப்பணி நடந்தது.