முருகம்பாளையம் மாகாளி அம்மன் கோவில் 9ம் ஆண்டுவிழா நாளை துவக்கம்
Makali Amman Temple Festival-அவிநாசி தாலுகா, முருகம்பாளையத்தில் உள்ள மாகாளி அம்மன் கோயில் 9 ஆம் ஆண்டு விழா, நாளை (21ம் தேதி) தொடங்குகிறது.;
Makali Amman Temple Festival-திருப்பூர் மாவட்டம், அவிநாசி தாலுகா, வஞ்சிபாளையம் ஆர்.எஸ். முருகம்பாளையத்தில், ஸ்ரீ மாகாளி அம்மன் கோவில் உள்ளது. சிறப்பு வாந்த இத்தலத்தில், மஹா கும்பாபிஷேகத்தின் 9வது ஆண்டு விழா, நாளை (21ம் தேதி) தொடங்குகிறது. நாளை காலை 8 மணிக்கு கணபதி ஹோமம், விக்னேஷ்வரர் பூஜை, பூர்ணாஹுதி நடைபெறவுள்ளது.
அதை தொடர்ந்து காலை 10:30 மணியளவில் மகா அபிஷேகம், கலச அபிஷேகம், பகல் 12 மணிக்கு மகா தீபாராதனை, அன்னதானம் நடைபெறுகிறது. எனவே, பக்தர்கள், பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள அம்மன் அருள் பெறுமாறு , முருகம்பாளையம், மாகாளி அம்மன் சேவா அறக்கட்டளை நிர்வாகிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2