விடுப்பில் சென்ற ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள்: பொதுமக்கள் அவதி
கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களின் தற்செயல் விடுப்பு போராட்டத்தால் ஒன்றிய அலுவலகங்கள் வெறிச்சோடின.
கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களின் தற்செயல் விடுப்பு போராட்டத்தால் ஒன்றிய அலுவலகங்கள் வெறிச்சோடின.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சிஅலுவலர்கள் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் சுப்பிரமணியன் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும். பல ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். உதவி இயக்குனர், உதவி பொறியாளர், ஒன்றிய பொறியாளர் நிலையிலான பதவி உயர்வை உடனே வழங்க வேண்டும். ஊராட்சி செயலர்களுக்கு கருவூலம் வழியாக சம்பளம் வழங்க வேண்டும். 100 நாள் வேலைத்திட்ட கம்ப்யூட்டர் ஆபரேட்டர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், என்பன உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுக்கும் போராட்டத்தில், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் ஈடுபட்டனர்.
அதன்படி அன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்களில் நேற்று 22 பேர் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் பங்கேற்றனர். ஒன்றியத்தில் உள்ள, 20 ஊராட்சி செயலாளர்களில் 19 பேர் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் ஒன்றிய அலுவலகம் மற்றும் ஊராட்சி அலுவலகத்திற்கு வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.