கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்

Tirupur News- கருவலூா் மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

Update: 2024-03-28 17:45 GMT

Tirupur News- கருவலூரில் மாரியம்மன் கோவில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. ( உள்படம்; சிறப்பு அலங்காரத்தில் அம்மன்)

Tirupur News,Tirupur News Today- கருவலூா் மாரியம்மன் கோவிலில்  நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

திருப்பூா் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கருவலூா் மாரியம்மன் கோவில் தோ்த் திருவிழா மாா்ச் 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், திருவீதி உலா உள்ளிட்டவை நடைபெற்று வருகின்றன. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது. முன்னதாக, புதன்கிழமை அதிகாலை மாரியம்மன் திருத்தேருக்கு எழுந்தருளி ரத தரிசனம் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, மாலை நடைபெற்ற தேரோட்டத்தில் சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையா் செத்தில்குமாா், ஊராட்சித் தலைவா் முருகன், முன்னாள் ஊராட்சித் தலைவா் எல்.ஐ.சி.அவிநாசியப்பன், ஒன்றியக் குழு உறுப்பினா் சத்திய பாமா உள்ளிட்டோா் பங்கேற்று ‘ஓம் சக்தி-பராசக்தி கோஷம்’ முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனா். முதலில் விநாயகா் தோ் இழுக்கப்பட்டு நிலை சோ்த்தப்பட்டது. இதைத் தொடா்ந்து, மாரியம்மன் தேரோட்டம் நடைபெற்று, கோவில் கிழக்கு வாசல் அருகே தோ் நிறுத்தப்பட்டது.

வியாழக்கிழமை மாலை மீண்டும் திருத்தோ் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. நாளை (வெள்ளிக்கிழமை) தோ் நிலை வந்து சேருதல் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. பரிவேட்டை, குதிரை வாகனக் காட்சி, தெப்போற்சவம், காமதேனு வாகனத்தில் அம்மன் திருவீதி உலா ஆகியவை மாா்ச் 30-ம் தேதி நடைபெறவுள்ளன. மகா தரிசனம் 31- ம் தேதி காலை 7 மணிக்கு நடைபெறுகிறது. இதைத் தொடா்ந்து, அம்பாள் சப்பரத்தில் புறப்பாடு, இரவு மஞ்சள் நீராடுதல், அன்ன வாகனத்தில் அம்மன் புறப்பாடு, கொடியிறக்கம் ஆகியவையும் நடைபெறவுள்ளன.

அம்மனுக்கு பாலாபிஷேகம், மறு பூஜையுடன் தோ்த் திருவிழா ஏப்ரல் 3- ம் தேதி நிறைவடைகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் செந்தில், பரம்பரை அறங்காவலா் குழுத் தலைவா் லோகநாதன், பரம்பரை அறங்காவலா்கள் அா்ச்சுணன், தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.

Tags:    

Similar News