அவினாசியில் மழலைகளுக்கு மங்கல இசையுடன் மகிழ்ச்சி நிறைந்த வரவேற்பு
அவினாசியில் நீண்ட இடைவெளிக்குபின், பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவ, மாணவியருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.;
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால், கடந்த, 19 மாத இடைவெளிக்கு பின், 1ம் வகுப்பு முதல், 8 ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கான வகுப்பு இன்று துவங்கியது.
திருப்பூர் மாவட்டம், அவினாசியில் உள்ள புனித தாமஸ் பள்ளிக்கு வந்த மாணவியரை, 9 முதல், 12ம் வகுப்பு படிக்கும் மாணவியர், பலுான்களை ஏந்தியவாறு, உற்சாகமாக வரவேற்றனர். பின்னணியில், மங்கல இசை வாசிக்கப்பட்டது.
துவக்கப்பள்ளியில் படிக்கும் குழந்தைகள், ஆர்வத்துடன் வகுப்பறைக்கு சென்றனர். அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.