அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச இளைஞர் தினக் கொண்டாட்டம்
Tirupur news- அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச இளைஞர் தினக் கொண்டாட்டம் மற்றும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.;
Tirupur news, Tirupur news today- அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச இளைஞர் தினக் கொண்டாட்டம் மற்றும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல் ( சர்வதேச வணிகம் )துறை சார்பில் சர்வதேச இளைஞர் தினம் மற்றும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் முனைவர். ஜோ. நளதம் தலைமையுரை ஆற்றினார்.
இதனைத் தொடர்ந்து, விழாவின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் லட்சுமணன், மாணவர்களுடன் உரையாடினார். தனது தொழில் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட அவர், தொழிலில் தேவையான முதலாளித் தகுதிகள், பணியாளர்களின் பங்கு, மற்றும் தொழில் தொடங்குவதற்கான நம்பிக்கை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
மேலும், “தன்னம்பிக்கைதான் சிறந்த மூலதனம்; அதைத் தொடரும் விடாமுயற்சியுடன் தொழில் மீது உள்ள ஈடுபாடு வெற்றியின் நெருக்கமான நண்பர்” என்று கூறினார். தொழில் தொடங்கும் போது எதிர்கொள்ள வேண்டிய சவால்களை சமாளிக்க மனதைரியத்துடன் பழக வேண்டும் என்றும், பிரச்சினைகளை சந்தித்து வெற்றியை அடைய வேண்டுமெனத் தனது அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு அறிவுரை வழங்கினார்.
மாணவர்களின் கேள்விகளுக்கும் லட்சுமணன் விரிவாக பதிலளித்தார்.
விழாவின் மற்றொரு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சக்தி குழுமத்தின் நிர்வாக இயக்குனர் சக்திவேல், தொழில்முனைவோர் வளர்ச்சியின் அவசியம் மற்றும் எதிர்காலத்தில் முக்கியமாக அமையும் தொழில்முறைத் துறைகள் குறித்து விளக்கினார்.
அதைத்தொடர்ந்து வணிகவியல் சர்வதேச வணிகம் துறை தலைவர் முனைவர் செ பாலமுருகன் தனது உரையில், இன்றைய நவீன யுகத்தில் இளைஞர்கள் புதிய சிந்தனைகளை உருவாக்கி, தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, நவீன சமூகத்தின் தேவைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், "சவால்களை சந்திக்க தயங்காதீர்கள். அனைத்து தடைகளையும் தாண்டி முன்னேறுங்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு சிறிய செயலும் உலகத்தை மாற்றக் கூடியது," என்று ஊக்கமளித்தார்.
மேலும் நிகழ்வின் இறுதியாக நன்றியுரை வழங்கினார்,
இந்நிகழ்வில் வணிகவியல் சர்வதேச வணிகம் துறை பேராசிரியர்கள் முனைவர் சி.ரம்யா, முனைவர் ப இந்திராணி, மற்றும் பிரியங்கா மற்றும் வணிகவியல் சர்வதேச வணிகம் துறை மாணவர்கள் பங்கு பெற்றனர், மேலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு போட்டிகள் வைக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.