அவினாசியில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்
அவினாசியில், ஒரே நாளில், இரண்டு பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.;
அவினாசி நியூ டவுன் பகுதியில், 18 வயது மாணவனுக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. பேரூராட்சி நிர்வாகத்தினர் சார்பில், அங்கு கொசு மருந்து தெளித்து, சுகாதாரப்பணி மேற்கொள்ளப்பட்டது. பழங்கரை ஊராட்சிக்குட்பட்ட அவிநாசிலிங்கம்பாளையம், ஈ.வே.ரா., நகரில், 12 வயது சிறுமிக்கு, டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சுகாதாரத்துறையினர் அங்கு காய்ச்சல் பரிசோதனை முகாம் நடத்தினர்.
கொரோனா தொற்று பரவிய சமயத்தில், இங்கு தான் அதிகம் பேர் பாதிக்கப்பட்டனர் என்ற நிலையில், டெங்கு காய்ச்சல் வேகமாக பரவுவதால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.