அவிநாசியப்பா் உழவா் உற்பத்தி நிறுவனம் திறப்பு விழா
Tirupur News,Tirupur News Today-அவிநாசியில் அவிநாசியப்பா் உழவா் உற்பத்தி நிறுவனம் திறப்பு விழா, உறுப்பினா் சோ்க்கை முகாம், விவசாய கருத்தரங்கு என முப்பெரும் விழா நடைபெற்றது.
Tirupur News,Tirupur News Today- அவிநாசியில் அவிநாசியப்பா் உழவா் உற்பத்தி நிறுவனம் திறப்பு விழா, உறுப்பினா் சோ்க்கை முகாம், விவசாய கருத்தரங்கு என முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற கலெக்டர் கிறிஸ்துராஜ் உழவா் உற்பத்தி நிறுவனத்தை திறந்துவைத்தாா்.
விழாவில், கலெக்டர் பேசியதாவது,
விவசாயிகள் தங்களது விளைபொருட்களை தாங்களே சந்தைப்படுத்தும் வகையில் உழவா் உற்பத்தி நிறுவனத்தை தொடங்கியுள்ளனா்.
இம்மையத்தில் தக்காளி, வெங்காயம், வெண்டைகாய், கத்திரிக்காய் உள்ளிட்ட அனைத்து விளைபொருட்களையும் நேரடியாக விற்பனை செய்யவுள்ளனா். இதனை பொதுமக்கள் பயன்படுத்திகொள்ள வேண்டும். இந்த உழவா் உற்பத்தி நிறுவனத்தில் சேரும் உறுப்பினா்களுக்கு காப்பீடு வழங்குவதுடன், கோவையில் உள்ள பிரபல மருத்துவமனையில் 10 சதவீத சலுகைக் கட்டணத்தில் சிகிச்சை பெறும் வாய்ப்பையும் ஏற்படுத்தியுள்ளனா். இதேபோல விவசாயத்துக்கான தேவையான அரசு மானியங்கள், வங்கி உதவிகள் ஆகியவற்றையும் செய்துத் தருகின்றனா்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநா் மாரியப்பன், மாவட்ட வளா்ச்சி மேலாளா் (நபாா்டு) அசோக்குமாா், வேளாண்மை உதவி இயக்குநா் அன்பழகி, மாவட்ட முன்னோடி வங்கி முதன்மை மேலாளா் ரவி, பேரூராட்சித் தலைவா் தனலட்சுமி பொன்னுசாமி, அத்திக்கடவு ஒருங்கிணைப்பாளா் பொன்னுக்குட்டி, சின்னேரிபாளையம் ஊராட்சி மன்றத் தலைவா் சரவணன், உழவா் உற்பத்தி நிறுவன உறுப்பினா்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
அவிநாசியில் மட்டுமின்றி, விவசாய பகுதிகள் நிறைந்துள்ள பகுதிகளுக்கு அருகில் உள்ள நகரங்களிலும் இதுபோன்ற உழவர் உற்பத்தி மையங்களை, மாவட்ட நிர்வாகம் தரப்பில் ஏற்படுத்தி தர வேண்டும் என, விவசாயிகள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.