அவிநாசியில் ரூ.1.91 கோடி மதிப்பில் மாட்டுத் தீவன உற்பத்தி ஆலை, எண்ணெய் ஆலை திறப்பு

Tirupur News-அவிநாசியை அடுத்த புதுப்பாளையம் ஊராட்சியில் ரூ.1.91 கோடி மதிப்பீட்டில் மாட்டுத் தீவன உற்பத்தி ஆலை, எண்ணெய் ஆலை ஆகியவற்றை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் திறந்துவைத்தாா்.;

Update: 2023-12-21 15:04 GMT

Tirupur News- அவிநாசியில் ரூ.1.91 கோடி மதிப்பில் மாட்டுத் தீவன உற்பத்தி ஆலை, எண்ணெய் ஆலை திறப்புவிழா நடந்தது. இதில் பங்கேற்ற அமைச்சர் மு.பெ சாமிநாதன், மகளிர் குழுக்களுக்கு கடனுதவிகளை வழங்கினார்.  

Tirupur News,Tirupur News Today- அவிநாசியை அடுத்த புதுப்பாளையம் ஊராட்சியில் ரூ.1.91 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மாட்டுத் தீவன உற்பத்தி ஆலை, எண்ணெய் ஆலை ஆகியவற்றை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் நேற்று ( புதன்கிழமை) திறந்துவைத்தாா்.

அவிநாசி ஒன்றியம், புதுப்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட கவுண்டம்பாளையத்தில் தேசிய ரூா்பன் திட்டத்தின்கீழ் ரூ.1.18 கோடியில் மாட்டுத் தீவன உற்பத்தி ஆலை, ரூ.72.78 லட்சத்தில் எண்ணெய் ஆலை உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.

இதனை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் திறந்துவைத்தாா். இதைத்தொடா்ந்து மகளிா் திட்டம் சாா்பில் சமுதாய முதலீட்டு நிதியின் கீழ் 16 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.13.15 லட்சம் மதிப்பிலான கடனுதவிக்கான காசோலைகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மகளிா் திட்ட இயக்குநா் வரலட்சுமி, உதவி திட்ட அலுவலா் விஜயகுமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் ரமேஷ்குமாா், ஊராட்சித் தலைவா் கஸ்தூரி பிரியா, உதவிப் பொறியாளா் செந்தில்குமாா், அவிநாசி ஒன்றிய செயலாளா் எஸ்.ஆா்.பழனிசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News