அவிநாசியில், பேராசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி மாணவர் கையெழுத்து இயக்கம்
Tirupur News- பேராசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் அவிநாசி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த கையெழுத்து இயக்கத்தில் மாணவ, மாணவிகள் கையெழுத்திட்டனர்.
Tirupur News,Tirupur News Today- பேராசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் அவிநாசி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த கையெழுத்து இயக்கத்தில் மாணவ, மாணவியர் கையெழுத்திட்டனர்.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள 4 ஆயிரம் பேராசிரியர் பணியிடங் களை நிரப்ப வலியுறுத்தி தமிழ் நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் அவிநாசி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் நிரப்பப்படாமல் உள்ள 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேராசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்ப வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
கடந்த இரண்டு ஆண்டுகளில், தமிழகத்தில் 20 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தோற்றுவித்து ஏழை, எளிய மாணவர்கள் உயர் கல்வி பயிலும் வாய்ப்பை தமிழக அரசு அளித்துள்ளது.
அதேசமயம், ஒரு கல்லூரியில் தேவையான ஆசிரியர்கள் பணியாற்றும் போதுதான் உயர் கல்வியின் தரத்தை உயர்த்த இயலும், தமிழகத்தில் உள்ள 170 அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலி யாக உள்ள ஆசிரியர் பணியிடங் களில் 4 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டு ஓராண்டுக்கு மேல் கடந்து விட்டது. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் பணி நியமனத்திற்கான அறிவிப்பு இதுவரையில் வெளியிடப்பட வில்லை. இது உயர் கல்வியின் தரத்தை பெரிதும் பாதிப்பதாக அமைந்துள்ளது.
மேலும் அரசு கல்லூரிகளில் 2015-ம் ஆண்டுக்குப் பிறகு கடந்த 8 ஆண்டுகளாக எவ்வித பேராசிரியர் பணி நியமனமும் செய்யப்படாத நிலையில், நெட் மற்றும் செட் தேர்வு முடித்து, முனைவர் பட்டம் பெற்று பேராசிரியர் பணிக்கான அனைத்து தகுதிகளும் பெற்ற பலருக்கும் பணியாற்றுவதற்கான வாய்ப்பு இன்னமும் கிடைக்கப் பெறாமலேயே உள்ளது. பலர் கவுரவ விரிவுரையாளர்களாக பணி யாற்றியே ஓய்வு பெற்று விட்டனர்.
எனவே தமிழக அரசு, அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் கையெழுத்து இயக்கம் நேற்று தொடங்கப்பட்டுள்ளது.
இந்த இயக்கத்தின் அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்த கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. கோரிக்கையை வலியுறுத்தி பேராசிரியர்களும், மாணவ, மாணவியரும் ஆர்வமுடன் கையெழுத்திட்டனர். இந்நிகழ்வில் அனைத்து துறை பேராசிரியர்களும் மாணவர்களும் பங்கு பெற்றனர்
இதேபோல தமிழகம் முழுவதும் இருந்து கையெழுத்து பெறப்பட்டு, அவை தமிழக அரசுக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தொழில் முனைவோருக்கான நான் முதல்வன் நிரல் திருவிழா - விழிப்புணர்வு நிகழ்ச்சி
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அவிநாசியில் தொழில் முனைவோருக்கான நான் முதல்வன் நிரல் திருவிழா - விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டம், தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பாக தொழில் முனைவோருக்கான நிரல் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இவ்விழாவினை கல்லூரி முதல்வர் ஜோ .நளதம் தலைமையேற்று நடத்தினார் வணிகவியல் சர்வதேச வணிகம் துறை தலைவர் செ பாலமுருகன் தொழில் முனைவோரை பற்றியும் நிரல் திருவிழாவைப் பற்றியும் எடுத்துரைத்தார்.இதில், சில பொது பிரச்னைகளுக்கு, புத்தாக்கத்தின் மூலம் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மாணவர்கள் தீர்வு காண்பது பற்றி விளக்கப்பட்டது.
மேலும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நிரல் திருவிழா என்கிற ஹேக்கத்தான் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பங்கேற்று புதிய தொழில் மற்றும் பொருட்களை நவீன முறையில் சந்தைப்படுத்துதலில் தங்களின் புதுமைகளை கூறி பரிசு பெறலாம், மேலும் தெரியாதவற்றை அறிந்து பயன்பெறலாம் என்பதையும் எடுத்துரைத்தார்.
இவ்விழாவில் மாணவர்களுக்கு நான் முதல்வன் திட்டம் பற்றியும் தொழில் முனைவோருக்கான பண்புகள், வாய்ப்புகள் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. அனைத்து துறையைச் சேர்ந்த மாணவர்களும் ஆசிரியர்களும் இதில் பங்கு பெற்றிருந்தனர்.பங்கு பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இறுதியாக சர்வதேச வணிகவியல் துறை மாணவி காயத்ரி நன்றியுரை வழங்கினார்.