அவினாசியில் அனுமதியின்றி பட்டாசு கடை: இருவர் கைது
அவினாசியில் அனுமதியின்றி பட்டாசு கடை நடத்தியதாக இருவரை போலீசார் கைது செய்தனர்.;
திருப்பூர் மாவட்டம், அவினாசி மங்கலம் ரோடு, கருணைப்பாளையம் பிரிவில், அனுமதியின்றி பட்டாசுக்கடை செயல்படுவதாக கிடைத்த தகவல் அடிப்படையில், அவினாசி காவல் உதவி ஆய்வாளர் ஈஸ்வரன் மற்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
எவ்வித அனுமதியுமின்றி பட்டாசுக்கடை வைத்திருந்த, கருணைப்பாளையம் பகுதியை சேர்ந்த பழனிசாமி, 62, தாமரை சரவணன், 40 ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து பிணையில் விடுவித்தனர். அவர்களது கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.