அவிநாசியில் பூட்டை உடைத்து 39 சவரன் நகை திருட்டு

அவிநாசியில், பூட்டியிருந்த வீட்டின் கதவு பூட்டை உடைத்த மர்ம நபர்கள், 39 சவரன் நகைகள் மற்றும் 60 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி சென்றனர்.;

Update: 2022-07-28 12:18 GMT

அவிநாசி சக்தி நகரில் உள்ள விஷ்ணு பிரபு என்பவரது வீட்டில், 39 சவரன் நகைகள் மற்றும் 60 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

அவிநாசி சக்தி நகரை சேர்ந்தவர் விஷ்ணு பிரபு, 33 இவரது மனைவி லாவண்யா, 28 இவர்களுக்கு மூன்று வயதில் விகான் பிரபு என்ற மகன் உள்ளார். நேற்று, திருப்பூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு விஷ்ணு பிரபு, குடும்பத்துடன் சென்றார். இன்று காலை, அவிநாசியில் உள்ள தன் வீட்டுக்கு அவர் வந்த போது, பூட்டியிருந்த கதவு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடந்தது.

அதிர்ச்சியடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 39 சவரன் நகைகள் மற்றும் 60 ஆயிரம் ரூபாய் ரொக்கம், திருடு போனது தெரிய வந்தது.

தகவலறிந்த அவிநாசி போலீசார், தடவியல் நிபுணர்களுடன் வந்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. பூட்டியிருந்த கதவு பூட்டை உடைத்து, 39 சவரன் மற்றும் 60 ஆயிரம ரூபாயை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து, வழக்குபதிவு செய்து, அவிநாசி போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags:    

Similar News